உலகம்
கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்: ஸ்டாலின்
தமிழ்நாட்டின் நலன் சார்ந்த 30 க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையளித்துள்ளார்.
டெல்லி தமிழக முதலமைச்சர் இன்று (17) பாரத பிரதமரை சந்தித்து பேசியுள்ளார்.
பிரதமர் மோடியுடனான மு.க.ஸ்டாலின் சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் வரை நடைபெற்றதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.
பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்டாலின் சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாக இடம்பெற்றதாக கூறியுள்ளார்.
“சந்திப்பு மகிழ்ச்சியான,மனநிறைவு தரும் சந்திப்பாக இருந்தது. எந்த கோரிக்கையாக இருந்தாலும், எந்த நேரத்திலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். ச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என கோரியுள்ளேன்.
இலங்கை கடற்படையினரின் தொல்லைகளுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கேட்டுள்ளேன்”என்றார்.