உலகம்
ஸ்டாலினை சந்தித்தார் கமல்

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், ஸ்டாலினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றார்.
தேர்தலில் வெற்றியடைந்தமைக்கு ஸ்டாலினுக்குப் பாராட்டுத் தெரிவிக்க கமலஹாசன் இந்தச் சந்திப்பை மேற்கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளதாக கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வராக 7 ஆம் திகதி ஸ்டாலின் பதவியேற்க உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது