Uncategorized
4 வயது பிள்ளைக்கு மது அருந்த கொடுத்தவர் கைது

4 வயதான பிள்ளைக்கு மது அருந்தக் கொடுக்கும் வீடியோப் பதிவொன்று சமூக ஊடகங்களில் பரவியது தொடர்பாக, சந்தேகநபர் நேற்று பேலியகொடை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபரொருவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.