Uncategorized
மன்னார் ஆயர் விடுத்துள்ள அறிவிப்பு

மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி இடம் பெற உள்ள நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக திருவிழாவிற்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தர அனுமதி இல்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.
மன்னார் ஆயர் இல்லத்தில் இன்றைய தினம் (12) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஆயர் இதனை கூறினார்.