உள்நாட்டு செய்தி
மதத்தலைவர்கள் விடுத்துள்ள கோரிக்கை

கொழும்பு துறைமுக நகர் விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பை பிற்போடுமாறு மதத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தினர்.
நாட்டில் COVID பெருந்தொற்று பரவுகின்ற நிலையில், மிக அவசரமாக துறைமுக நகர் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான தேவை என்ன என கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.