உள்நாட்டு செய்தி
சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது
சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 2 மாதங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகி வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 1,012 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 862 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது.
மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,27,980 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.