உள்நாட்டு செய்தி
பயணக் கட்டுப்பாடு நீக்கம்
நாடளாவிய ரீதியில் கடந்த மூன்று தினங்களாக அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு இன்று அதிகாலை 4.00 மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஆனால் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இரவு 11.00 மணியிலிருந்து அதிகாலை 4.00 மணி வரை பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் எனவும் அந்தக் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இன்று முதல் தேசிய அடையாள அட்டை நடைமுறையை பயன்படுத்தி வீட்டில் இருந்து அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைவாகவே வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்..
அடையாள அட்டையில் இறுதி இலக்கம் ஒன்றை இலக்கங்களை கொண்டவர்கள் (1,3,5,7,9) வெளியில் செல்ல முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதன்படி இன்று (17) காலை முதல் அட்டன் உள்ளிட்ட மலையக நகரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடையாள அட்டையில் இறுதி இலக்கத்தின்படி வெளியில் வர தவறுவோர் கடுமையான பரிசோதிக்கப்பட்டு வீடுகளுக்கு திருப்பியனுப்படுவதாக எமது செய்தியாளர் கூறினார்.
எனவே நகரங்களுக்கு வருகைத்தரும் பெருந்தோட்ட மக்கள் கட்டாயம் அடையாள அட்டையை அவதானித்து அதன்படி வருகைத்தருவதன் மூலம் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பொலிஸார் கேட்டுள்ளனர்.