உள்நாட்டு செய்தி
70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட பியகம வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், காலி மாவட்டத்திற்கு உட்பட்ட பட்டுவன்ஹேன மற்றும் வலம்பகல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மாத்தளை மாவட்டத்திற்கு உட்பட்ட வல்பொல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் யட்டவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட அலவத்த கிராமம் ஆகியன உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், களுத்துறை மாவட்டத்திற்கு உட்பட்ட ரய்கம்வத்த கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட ரய்கம்வத்த கீழ்ப்பிரிவு, மஹ இங்கிரிய கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட ரய்கம்புர பிரிவு மற்றும் மஹ இங்கிரிய கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட மக்கள் குடியிருப்பு தொகுதி மற்றும் கித்துல்கொட தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட வெதிகந்த கிராமம் ஆகியனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட கெஹெலுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட கடுபஹர கிராமம் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட நுகவெல மேற்கு, உடுஹவுபே, நுகவெல கிழக்கு, எந்தன, மடலகம, பனபிட்டிய தெற்கு, பனபிட்டிய வடக்கு, கப்பேல, மியன்விட மேற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கெர்கஸ்வேல்ட், இன்ஜஸ்ட்ரி, பொகவந்தலாவ, கொட்டியாகலை, என்பில்ட், டில்லரி, லொய்னொன், வெஞ்சர், பொகாவத்தை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மாஞ்சோனை ஊடான லேக் வீதி, வேவிங் மில் வீதி, வேலபொடி வீதி, விதானை பகுதியை நோக்கிய லேக் மாவத்தை, கடற்கரை பகுதியை நோக்கிய கண்ணகிஅம்மன் கோவில் வீதி மற்றும் அப்புஹாமி வீதி ஆகிய 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் பகுதிகள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, பெரிய கிண்ணியா, குட்டிக்கரச்சி, அஹுதர் நகர், பெரியதுமுனை, மலின்துறை, ரகுமானியா நகரம், சின்னகிண்ணியா, மாஞ்சோலை, கட்டியாறு, குறிஞ்சாக்கேணி, முனச்சேனை ஆகிய 12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், குருணாகல் மாவட்டத்தின் கிரியுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.