உள்நாட்டு செய்தி
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டின் பலபாகங்களில் நிலவும் சீரற்றவானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு இரத்தினபுரி மாத்தறை கேகாலை காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி களுத்துறை மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய காலி மாவட்டத்தில் Niyagama,Neluwa,Elpitiya,Baddegama,Thawalama, மற்றும் Yakkalamulla பிரதேச செயலக பகுதிகள் உட்பட Nagoda பிரதேச செயலக பிரிவுகள் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
அத்துடன் களத்துறை மாவட்டத்தின் Palindanuwara,Agalawatta,Walallawita,Mathugama,Dodangoda,Ingiriya மற்றும் Bulathsinhala ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மாத்தறை மாவட்டத்தின் Pitabeddara பிரதேச செயலக பிரிவு ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு இரத்தினபுரி கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் சீதாவாக்கை பிரதேச செயலக பிரிவு இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலிய கொடை பிரதேச செயலக பகுதி மற்றும் களுத்துறை மாவட்டத்தின் ஹொரனை பிரதுச செயலக பிரிவு மேலும் கேகாலை மாவட்டத்தின் வரக்காப்பொல மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கு இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் Elapatha,Ayagama,Kalawana,Kuruwita,Nivithigala, மற்றும் இரத்தினபுரி கிரியெல்ல பிரதேச செயலக பிரிவுகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் களு கங்கை நில்வாளா கங்கை மற்றும் கிங்கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதனால் குறித்த பகுதிகளை அண்மித்துள்ளவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்று மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.