உள்நாட்டு செய்தி
மத்திய மாகாணத்திற்கான போக்குவரத்துக்கு தடை

கொரோனா தொற்று அச்சம் காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதை அடுத்து ஹட்டன் – பலாங்கொடை பிரதான வீதியின் பொகவந்தலாவை பெற்றசோ, ஹட்டன் கொழும்பு வீதியின் கலுகல சந்திகளில் வீதி மூடப்பட்டு பொலிஸார், இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் நள்ளிரவு 12 மணி முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளர்.
இதேவேளை, ஹட்டன் பிரதான பஸ் தரிப்பிட காரியாலயம் மூடப்பட்டுள்ளதுடன் அரச மற்றும் தனியார் பஸ்களின் தூரச் சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளூர் சேவைகள் மாத்திரம் இடம்பெறுவதாக பஸ் நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றர்.
மேலும், கொரோனா தொற்று விழிப்புணர்வு நடவடிக்கையில் சுகாதார பிரிவிரும் பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்ற போதிலும், முகக்கவசம் அணியாது மற்றும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது பொது இடங்களில் பொதுமக்கள் நடமாடுவதை அவதானிக்க முடிவதாக செய்தியாளர் தெரிவித்தார்.
