உள்நாட்டு செய்தி
கிளை வீதிகளை பயன்படுத்தி வேறு மாகாணங்களுக்கு செல்ல முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கிளை வீதிகளை பயன்படுத்தி வேறு மாகாணங்களுக்கு செல்ல முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (11) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.
அத்தகைய நபர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகக் கருதி, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று நள்ளிரவு 12 மணி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாகவும், தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறும் அவர் பொது மக்களை கேட்டுக்கொண்டார்.