உள்நாட்டு செய்தி
நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரணம்

நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நன்தன கலபொட இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கும் மேலதிகமாக 5000 கொடுப்பனவையும், உலர் உணவு பொருட்களையும் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள இன்ஜஸ்ரி கிராம சேவையாளர் பிரிவில் இன்றும் (05) புதிதாக 14 தொற்றாளர்கள் அடையாளளம் காணப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் அங்கு 31 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.