Connect with us

உள்நாட்டு செய்தி

“பொதுமக்கள் புத்திசாலித்தனமாகசெயற்படுவது அவசியம்”

Published

on

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பிலான எந்த சவால்களையும் எதிர்க்கொள்வதற்கு அரசாங்கம் சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

தீவிர சிகிச்சை சிகிச்சை பிரிவில் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய தேவையான கட்டில் வசதிகள் உண்டா? என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், கொழும்பு வைத்தியசாலையில் மாத்திரமின்றி பிரதேச வைத்தியசாலைகளிலும் இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிலைமையை எதிர்க்கொள்ளக்கூடிய வகையில் சிகிச்சைக்கான சகல வசதி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த வருடத்தில் தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு கிட்டவில்லை. கொவிட் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் இந்த வருடத்தில் புத்தாண்டை கொண்டாடுவதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்து வந்த சவால்களுக்கு மத்தியில் பொதுமக்கள் புத்திசாலித்தனமாக செயற்படுவார்கள் என்று எதிர்ப்பார்த்தோம். ஆனால் அது இடம்பெறவில்லை. எதிர்க்காலத்திலும் விட்ட தவறை பொது மக்கள் தொடர்ந்து மேற்கொள்ளமாட்டார்கள் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

அரச நிறுவனங்களில் கொவிட் நிலைமைக்கு மத்தியில் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களுடன் பொது மக்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எமது அமைச்சில் 500 ஊழியர்கள் இருக்கின்றனர். தற்போது 200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதோபோன்று ஏனைய நிறுவனங்களிலும் கடமைகள் இடம்பெறும். இதனால் போக்குவரத்து நெருக்கடி இடம்பெறுவதற்கு இடமில்லை. பஸ்களில் ஆசனங்களுக்கு அமைவாக பயணிகள் பயணிக்கும் நிலை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.