உள்நாட்டு செய்தி
ஹீத் ஸ்ட்ரீக்கிற்கு ICC தடை
சிம்பாவே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், வேகப்பந்துவீச்சாளருமான ஹீத் ஸ்ட்ரீக், 8 ஆண்டுகள் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவும், விளையாடவும் தடை விதித்து ICC உத்தரவிட்டுள்ளது.
ICC விதிமுறைகளுக்கு மாறாக இலஞ்சம் பெறுதல், மேட்ச் பிக்ஸிங் தகவல்கள் பரிமாறுதல் போன்ற குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக வைக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து ICC விசாரணை நடத்தி வந்தது.
இதில் 5 விதமான குற்றச்சாட்டுகளைத் தான் செய்ததாக ஹீத் ஸ்ட்ரீக் ஒப்புக்கொண்டதை அடுத்து, 8 ஆண்டுகள் தடை விதித்து ICC உத்தரவிட்டுள்ளது.
47 வயதான ஹீத் ஹிஸ்ரிக் 1993 ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி 2005 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெற்றார்.