உள்நாட்டு செய்தி
மீண்டும் 5000

சமூர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மீண்டும் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
புத்தாண்டுக்கு முன்னர் இந்த நிவாரண கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சகல சமூர்தி அதிகாரிகளையும் பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.