உள்நாட்டு செய்தி
1000 ரூபா கிடைக்கும், நலன்புரி சேவைகள் கிடையாது பொகவந்தலாவையில் மக்கள் போராட்டம்

பொகவந்தலாவ போகவன லின்ஸ்டன் தோட்ட மக்கள், தோட்ட அதிகாரிக்கு எதிராக ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டுமானால் நாளொன்றுக்கு பச்சைத் தேயிலை 20 கிலோவை எடுக்க வேண்டும் என தோட்ட அதிகாரி தெரிவிப்பதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தோட்ட அதிகாரியிடம் வினவியபோது சம்பள நிர்ணய சபையினூடாக வழங்கப்பட்ட ஆயிரம் ரூபா சம்பள உயர்வை இந்த மாதத்தில் இருந்து வழங்க தயார் என கூறினார்.
அப்படியானால் நாளோன்றுக்கு தொழிலாளர்கள் அதிகளவான பச்சை தேயிலை கிலோவை பறிக்க வேண்டும் என கூறினார்.
கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து கம்பனிகள் விகியுள்ளதால் நலன்புரி சேவைகளை வழங்குவதில் சிரமம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சம்பள நிர்ணய சபை வழங்குமாறு அறிவுறுத்திய 1000 ரூபா சம்பளத்தை மாத்திரமே வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த இணக்கப்பாட்டுக்கமைய தொழிலாளர்களுக்கான நவன்புரி சேவைகளை வழங்குவதிலிருந்து கம்பனிகள் விலகியுள்ளதாகவும் லின்ஸ்டன் தோட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.