Connect with us

உள்நாட்டு செய்தி

234 தொகுதியிலும் மக்கள் ஆர்வம் – தமிழகத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Published

on

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்று (06) ஒரேநாளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகின்றது.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் உள்ளதுடன் அதில் 6 கோடியே 28 இலட்சம். பேர் வாக்களித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன.

வாக்குபதிவுக்காக மொத்தம் 1 இலட்சத்து 29 ஆயிரம் வாக்கு இயந்திரங்களும், 91 ஆயிரத்து 180 கட்டுப்பாட்டு இயந்திரமும், 91 ஆயிரத்து 190 விவிபாட் இந்திரமும் பயன்படுத்தப்படுகின்றன.

அதன்படி இன்று இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமானது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தேர்தல் நடைபெறுவதாக எமது செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் சமூக இடைவெளியை பேண வட்ட வடிவில் அடையாளம் இடப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலையில் இருந்தே மிகவும் ஆர்வமாக மக்கள் வாக்களிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 1 இலட்சத்து 58 ஆயிரம் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் இவர்களில் 23 ஆயிரத்து 200 பேர் மத்திய படையை சேர்ந்தவர்கள்.

இன்று மாலை 6 மணிவரை அனைத்து மக்களும் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்காக பிரத்யேகமாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
உரிய பாதுகாப்புகளுடன் வந்து அவர்கள் வாக்களிக்கவும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.