Connect with us

உள்நாட்டு செய்தி

ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மன்னாரில்

Published

on

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் இன்றைய தினம் காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து பேரணியாக மன்னார் எடுத்து வரப்பட்டது.

மன்னார் மாவட்டம் முழுதும் உள்ள கத்தோலிக்க மக்கள் மட்டுமல்லாது அனைத்து மத மக்களும் இணைந்து வீதிக்கு இரு மருங்கிலும் கருப்புக் கொடிகளை நாட்டி  ஆயரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டனர்.

தேவன் பிட்டி பகுதிகளில் இருந்து மக்கள் மலர் தூவி ஆயரின் ஆயரின் பூதவுடலை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

ஓய்வு நிலை ஆயரின் பூதவுடல் மாலை 2.45 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு  மக்களினுடைய அஞ்சலிக்காக   மன்னார்   ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஆயரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள் அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் உட்பட மன்னார் மாவட்டத்தில் உள்ள பொது மக்களும் இணைந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில்  பவனியாக ஆயரின் பூதவுடல் ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

அங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தொடக்கம் திங்கட்கிழமை மதியம் 2 மணி வரை பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை மாலை 3 மணி அளவில் பேராலயத்தில் இறுதி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

இலங்கையின் அனைத்து ஆயர்களும் இணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுப்பார்கள்.

அதனைத் தொடர்ந்து பூதலுடல் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.