உள்நாட்டு செய்தி
ஆடைத் தொழிற்துறை எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றிக்கொள்வதற்கான முழு ஆதரவை வழங்க அரசாங்கம் தயார் – ஜனாதிபதி

ஆடைத் தொழிற்துறை எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு அரசு தமது முழு ஆதரவையும் வழங்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
ஒருங்கிணைந்த ஆடைத் தொழில் சங்க கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்துறையில் தரமான மற்றும் பயனுள்ள வகையிலான வேலைத்திட்டங்களை திட்டமிட்டு மேற்கொள்ள உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆடைத் தொழிற்துறை மூலம் 5.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை இவ்வருடம் ஈட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் நிலவும் கொரோனா தொற்று மற்றும் சுகாதார விதிமுறைகள் காரணமாக வர்த்தக செயற்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை குறித்தும் பிரதிநிதிகள் ஜனாதிபதியை தெளிவுப்படுத்தியுள்ளனர்.
குறித்த துறையில் நிலவும் ஆளணி பற்றாக்குறை குறித்தும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.