முக்கிய செய்தி
சட்டவிரோதமாக நடத்திச்செல்லப்பட்ட பதிவாளர் அலுவலகம் சுற்றிவளைப்பு – ஒருவர் கைது
காத்தான்குடியில் வீடொன்றுக்குள் சூட்சுமமான முறையில் நடத்திச்செல்லப்பட்ட சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரிடமிருந்து தரிசுக் காணிகளுக்கான 205 உறுதிப்பத்திரங்கள், 58 வெற்று உறுதிப்பத்திரங்கள், 63 காணி மாற்று உறுதிப் பத்திரங்கள், வெவ்வேறு அதிகாரிகளின் உத்தியோகபூர்வ கையொப்பத்துடன் கூடிய 30 பத்திரங்கள், 12 தேசிய அடையாள அட்டைகளின் 12 பிரதிகள் என்பன தெரிவித்துள்ளனர்.மட்டக்களப்பை சேர்ந்த 54 வயதான ஒருவரே பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்