Connect with us

Sports

பதிலடி கொடுத்து மேற்கிந்திய தீவுகளை திக்குமுக்காட வைத்த இலங்கை

Published

on

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட T20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை அடைந்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.

ஏண்டிகுவா கூல்ட்ஜ் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதற்கமைய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கையணி சார்பில் தனுஸ்க குணதிலக்க 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சில் டுவேன் பிராவோ 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதனையடுத்து 161 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்த மேற்கிந்திய தீவுகள் அணி 18.4 ஓவர்களை மாத்திரம் எதிர்க்கொண்டு 117 ஓட்டங்களை பெற்று 43 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில் மெக்கோய் மாத்திரம் அதிகூடிய 23 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள இலங்கையின் பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க மற்றும் சந்தகென் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக வனிந்து ஹசரங்க தெரிவானார்.

இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளை கொண்ட T20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை அடைந்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவதும் இறுதியுமான T20 போட்டி எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.