Connect with us

Sports

இலங்கையை அழைத்து கிப்ட் கொடுத்த மேற்கிந்திய தீவுகள்:T20 தொடரை கைப்பற்றி அசத்தல்

Published

on

இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று (08) அதிகாலை எண்டிகுவா கொலிட்ஜ் மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்டுகளால் வென்றது.

இந்த வெற்றியின் மூலமே மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியின் மூலமே மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை சார்பில் சந்திமால் ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சில் எலன், சின்கிளாயார், ஓல்டர், மெக்கோய் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்கு 132 ஓட்டங்களை இலக்காக கொண்டு பதிலளித்த மேற்கிந்திய தீவுகள் அணி 19 ஓவர்களை எதிர்க்கொண்டு போராடி வெற்றிப் பெற்றது.

அந்த அணியின் துடுப்பாட்டத்தில் பேபியன் எலன் சிக்சர் மழை பொழிந்து ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதிச் செய்தார்.

இலங்கையணியின் பந்து வீச்சில் சந்தகென் 3 விக்கெட்டுகளையும், துஸ்மந்த ச்சமீர மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக பெபியன் எலன் தெரிவானார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளை கொணட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி நோர்த் சவுண்ட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.