முக்கிய செய்தி
முன்னாள் சுகாதார அமைச்சரின் பிணை விண்ணப்பம் ஒத்திவைப்பு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த பிணை விண்ணப்பம் எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தன்னை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரம்புக்வெல்ல இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பான வழக்கில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்ததை அடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வழக்கு முடியும் வரை கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ஐவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் பிணை கோரிக்கைகளை நிராகரித்த நீதவான் நடவடிக்கை சட்டத்திற்கு முரணானது என கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த பிணை மனுவில் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.எனவே, எந்தவொரு நிபந்தனையிலும் தன்னை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறும் அவர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்