முக்கிய செய்தி
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளில் மாற்றம்
இன்று (04) முதல் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக பெறப்படும் சேவைகள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்திலும் சேவைகளைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்வதும் இன்று (04) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக தானியங்கி தொலைபேசி எண் மற்றும் இணையதளம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொது மக்கள் சேவையை சரியான முறையில் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
011 2 117 116 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் www.dmtappointments.dmt.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளுக்கான திகதி மற்றும் நேரத்தை பதிவு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.