முக்கிய செய்தி
உலகளாவிய எரிபொருள் நுகர்வு வீழ்ச்சி: சர்வதேச எரிசக்தி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

பெட்ரோலியத்திற்கான உலகளாவிய தேவையின் வளர்ச்சி குறைந்துள்ளதாக சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒபெக் அமைப்புக்கு வெளியே உள்ள நாடுகளின் உற்பத்தி அதிகரிப்பினால் எண்ணெய் உபரி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில், உலகளாவிய எரிபொருள் நுகர்வு சுமார் 35% குறைந்துள்ளதாக சர்வதேச எரிசக்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்த நிலையே இந்த விலகலுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.
சர்வதேச எரிசக்தி ஏஜென்சியின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டு முழுவதும் உலகளாவிய எரிபொருள் தேவை ஒரு நாளைக்கு 1.2 மில்லியன் பீப்பாய்கள் அதிகரிக்கும் எனவும், இது கடந்த ஆண்டு வளர்ச்சியில் பாதி என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஒபெக் பிளஸ் கூட்டணிக்கு வெளியே உள்ள நாடுகளில் எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு சுமார் 1.6 மில்லியன் பீப்பாய்கள் அதிகரித்துள்ளன.
இந்த சூழ்நிலையின் அடிப்படையில், 2024 முழுவதும் உலகளாவிய எண்ணெய் விலை நிலையானதாக இருக்கும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.