முக்கிய செய்தி
தெற்கு அதிவேக வீதியில் விபத்து: 5 பேர் படுகாயம்
தெற்கு அதிவேக வீதியில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது, இன்று (09.02.2024) அதிகாலை 5.45 மணியளவில், சூரியவெவ – அந்தரவெவ சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
அஹுங்கல்லையில் இருந்து எல்ல நோக்கி பயணித்த சுற்றுலாப் பயணிகள் குழுவே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
அதிவேக வீதியை நோக்கிச் சென்ற லொறியின் பின்புறம் வான் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் வானில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் 4 பேரும், சாரதி உதவியாளரும் காயமடைந்துள்ளனர்.
மேலும், காயமடைந்தவர்களில் 8 வயது ரஷ்ய சிறுமியும் அடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.