முக்கிய செய்தி
அரசியல் கைதிகளை விடுவிப்பதில் ஜனாதிபதி தயக்கம் காட்டுவது ஏன்..! சாணக்கியன் சீற்றம்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் கைதிகளை விடுதலை செய்வதில் ஜனாதிபதி தயக்கம் காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இன்றையதினம் (26.01.2024) அரசியல் கைதியை சந்திக்க சென்றபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 28 வருடங்களாக சிறையிலிருக்கும் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியை நேரில் சந்திக்க முயற்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.