முக்கிய செய்தி
மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி !
மீன்களின் மொத்த விலை 50 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேலியகொடை மத்திய மீன் சந்தையின் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மீன் கொள்வனவுக்கான கேள்வி குறைந்துள்ளமையினால் இவ்வாறு விலை குறைவடைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.
பாறை, தலபத் உள்ளிட்ட பல்வேறு மீன் வகைகளின் விலை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மீனின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், மக்களின் கொள்வனவு குறைவடைந்து உள்ளது. இதனால் பாரியளவில் மீன் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.