முக்கிய செய்தி
யோகட் மற்றும் பால் பக்கெற்றுகளின் விலை உயர்வு
யோகட் மற்றும் பால் பக்கெற்றுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.
வற் வரி காரணமாகவே விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதனால் யோகட் ஒன்றின் விலை 10 ரூபாய் அதிகரித்து, 70 ரூபாயாக இருந்த யோகட்டின் விலை 80 ரூபாயாக உயர்ந்துள்ளது.
பால் பக்கெற் ஒன்றின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன் புதிய விலை 200 ரூபாவாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது