முக்கிய செய்தி
யாழில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களுக்கு 25 பேருக்கு விளக்கமறியல்
எல்லை தாண்டி மீ்ன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய கடற்றொழிலாளர்களும் எதிர்வரும் 22 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையால் நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 25 இந்திய கடற்றொழிலாளர்களும் இன்று (10.12.2023) மதியம் கடற்படையினரால் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று (10.12.2023) பிற்பகல் 3:30 மணியளவில் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பதில் நீதவான் பா.சுப்பிரமணியம் குறித்த 25 கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 22 ம் திகதிவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இன்று அதிகாலை கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதனையடுத்து, இந்திய கடற்றொழிலாளர்களை மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் இந்திய கடற்றொழிலாளர்கள், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்ப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.