முக்கிய செய்தி
பண்டிகை காலத்தில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு?
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு இந்த நாட்களில் மரக்கறி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்காக வர்த்தகர்கள் வருவதில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி காணப்படுவதாக பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமைகள் காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் மொத்த விலையும் இந்த நாட்களில் கணிசமாக அதிகரித்துள்ளதாக பேலியகொட மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் உயரும் எனவும் குறிப்பிட்ட வகை மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் பேலியகொட மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.