Connect with us

உள்நாட்டு செய்தி

மலைநாட்டு தேயிலைத் துறைக்கான மாற்று வழி ஒன்றை தேடுவதற்கான காலம் வந்துள்ளது – SB

Published

on

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு சம்பள நிர்ணய சபையினுடாக வழங்கப்பட்டவுடன் கூட்டு ஒப்பந்தம் இரத்தாகும் என நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹட்டன் கினிகந்தேன பகுதியில் நேற்று (13) நிகழ்வு ஒன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

“மலையக தேயிலை தொழில் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளது. உலகச் சந்தையில் தேயிலையில் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. கம்பனிகள் நட்டம் அடைந்துள்ளளன. ஆகவே மலைநாட்டு தேயிலைத் துறைக்கான மாற்று வழி ஒன்றை தேடுவதற்கான காலம் வந்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் பயிரிடுவதற்கான உயர்தரமிக்க கோப்பி வகையை விவசாய திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது தோட்ட கம்பனிகள் நட்டத்தில் இய்குகின்றன. சிலவேளை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மேலதிகமாவும் வேலை செய்ய வேண்டி ஏற்படலாம். கட்டாயம் 1000 ரூபா வழங்கப்படுவது அவசியம். அப்படி இல்லாவிடின் கம்பனிகள் தோட்டங்களை விட்டு செல்ல வேண்டும். கம்பனிகள் இலாபத்தை பெற முயலாம்.

ஆளும் பொதுஜன முன்னணியில் பல முரண்பாடுகள் ஏற்படுவதற்கு உறுப்பினர்களுக்கு இடையில் கூட்டமைப்பு தொடர்பான புரிதல் இல்லாமையே காரணம் என கூட்டமைப்பு முன்னணி ஒன்றுக்குள் அரசியல் செய்வது எவ்வாறு என்பது தொடர்பில் பொதுஜன முன்னணியில் உள்ள பலருக்கு தெரியவில்லை அதுவே சில முரண்பாடுகளுக்கு காரணமாகும். கட்சிக்குள் பல முரண்பாடுகள் உள்ளன. கட்சிகள் பல இணைந்து செயற்படும் போது அந்ததந்த கட்சிகளின் தனித்துவம்; பாதுகாக்கப்பட வேண்டும். ஆகவே கூட்டணியில் ஏதேனும் பிரச்சினையிருந்தால் அவை கூட்டணிக்குள்ளேயே நிவர்தி செய்யப்பட வேண்டும். நாம் ஒருபோதும் கூட்டணி பிரச்சினையை ஜனாதியிடமோ, பிரதமரிடமோ எடுத்துச் சென்றதில்லை. முரண்பாடுகளின் பிரதிபலனே பாரத லக்ஸ்மனின் உயிரை பறித்தது.ஆகவே ஜனாதிபதி தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வை வழங்குவார். ரஞ்ஜன் பாராளுமன்றத்திற்கு வரமுடியாது. ரஞ்சனுக்கு மேன்முறையீடு செய்வதற்கான இடமும் இல்லை” என்றார்.