Connect with us

முக்கிய செய்தி

பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரண வாக்குமூலம்…!

Published

on

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற இளைஞன் ஞாயிற்றுக்கிழமை (19) உயிரிழந்தார்.

அவர் உயிரிழக்கும் முன்னர் வழங்கிய மரண வாக்குமூலத்தில் பொலிஸார் செய்த பல சித்திரவதைகள் அம்பலமாகின.

களவு சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் கொண்டு சென்ற வட்டுக்கோட்டை பொலிஸார் கட்டித்தூக்கி விட்டு அடித்தார்கள்.

முகத்தில் துணியைக் கட்டி விட்டு தண்ணீர் ஊற்றி ஊற்றி அடித்தார்கள்.

தொண்டையால் சாப்பாடு இறங்குதில்லை. கொஞ்சமாகத் தான் சாப்பிட முடிகிறது.

சாப்பாட்டிற்கு மனமே இல்லாமல் உள்ளது என்றும் அவ்விளைஞன் தெரிவித்துள்ளார்.

பின்னர் நிலத்தில் இருந்து இரண்டு முழம் உயரத்தில் தலைகீழாக கட்டித் தூக்கிவிட்டு, கையை பின்பக்கமாக கட்டிவிட்டு கேட்டு, கேட்டு கொடூரமாக தாங்கினார்கள்.

நான் களவு எடுக்கவில்லை என்று கூறினேன். பின்னர் பெற்றோல் பையினுள் போட்டுவிட்டு தாக்கினார்கள். நான் மயங்கிவிட்டேன்.

இரண்டு கைகளும் தூக்க முடியாமல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முதல் நாள் சாப்பாடு தரவில்லை.

அடுத்தநாள் சாப்பாடு தரவில்லை. அவர்களது அறைக்குள் அழைத்துச் சென்று, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு போடக்கூடாது, யாருக்கும் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்கள்.

பின்னர் அடுத்த நாளும் பயமுறுத்தினார்கள். மதுவைக் கொடுத்து குடிக்குமாறு கூறினார்கள் என்றும் தெரிவித்துள்ளார் .

இந்நிலையில், பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு கருதி சுன்னாகம், மானிப்பாய், இளவாலை, யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ்
நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பொலிஸார்
குவிக்கப்பட்டுள்ளதுடன்,

விசேட அதிரடிப் படையினரும் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு எட்பட்ட பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

உயிரிழந்த இளைஞனுக்கு நீதி வழங்காமல் கண்துடைப்பாக சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் வெறுமனே இடமாற்றம் வழங்கிவிட்டு பொலிஸார் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *