முக்கிய செய்தி
வெளிநாட்டு கையிருப்பு 3.56 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ மொத்த வெளிநாட்டு கையிருப்பு ஒக்டோபர் மாத இறுதியில் 3,562 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.செப்டெம்பர் முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் 0.6 வீத அதிகரிப்பு காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்குச் சமமான, சீனாவின் மக்கள் வங்கியின் இடமாற்று வசதியை இந்த எண்ணிக்கை உள்ளடக்கியதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. இது பயன்பாட்டின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.ஒகஸ்ட் மாத இறுதியில் இலங்கையின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு 3.8 பில்லியன் அமெரிக்கடொலர்களாக இருந்தது.