முக்கிய செய்தி
சட்டவிரோத மின் பாவனையால் பலியான உயிர்…!
புத்தளம் புலிதிவாசலை பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த பெண்ணும் அவரது கணவரும் கூலித் தொழிலாளிகள்தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் பெண்ணின் வீட்டில் 3,000 ரூபாய் மின்கட்டணத்தை செலுத்த முடியாததால், மின்சார சபை ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.எவ்வாறாயினும், அவரது காணியில் உள்ள மின் மோட்டாரை இயக்க அவரது தாயின் வீட்டிலிருந்து வயர் மூலம் மின்சாரத்தை பொருத்தி நீர் நிரப்ப முயற்சித்தப்போது குறித்த பெண் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்த பெண் புலிதிவாசலை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர்.இருப்பினும், அவரது உடலை அவரது இல்லத்திற்கு கொண்டு வருவதற்கு முன், அப்பகுதி மக்கள் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை செலுத்த ஏற்பாடு செய்ததோடு, அவரது வீட்டிற்கு மின்சாரம் வழங்கவும் மின்சார சபை ஊழியர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.