முக்கிய செய்தி
ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து – இரு சிறுவர்கள் உட்பட 4 பேர் காயம்
பேருவளை – மரக்கலவத்தை பகுதியில் முச்சக்கர வண்டி ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 02 சிறுவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.அநுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலுடனேயே முச்சக்கர வண்டி மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்துக்குள்ளான 02 சிறுவர்கள் உட்பட 04 பேரும் சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.