Connect with us

முக்கிய செய்தி

பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது !

Published

on

ஐக்கிய மக்கள் சக்தியின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.எச்.எம் தர்மசேனவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும், பிபில பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

ஏனைய சந்தேகநபர்கள் இருவரும் பிபில பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 39 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாளிகாவில பகுதியிலிருந்து ஒக்கம்பிட்டிய பகுதிக்கு முச்சக்கர வண்டியில் பயணித்தபோதே, 810 கிராம் கஞ்சாவுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களை இன்று வெல்லவாய நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்த நடடிவக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *