முக்கிய செய்தி
வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட சமுர்த்திவங்கி முகாமையாளர்
வாடிக்கையாளர்களை கடுந்தொனியில் தகாத வார்த்தைகளால் திட்டிய சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஒருவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
அக்குரெஸ்ஸ சமுர்த்தி வங்கியின் முகாமையாளருக்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாடிக்கையாளர் ஒருவரை மிக இழிவான வார்த்தைகளால் அவர் தூற்றும் காணொளி அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த பெண் முகாமையாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சமுர்த்தி பனிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் போது வாடிக்கையாளர்களை மோசமாக திட்டிய குறித்த பெண் முகாமையாளர், தவறிழைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
பணியாளர்களினால் இழைக்கப்பட்ட தவறினை மூடி மறைக்கவே அவ்வாறே வாடிக்கையாளர்களை திட்டி தீர்த்து உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய நிலையில் அறிக்கையொன்று தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தவறிழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.