முக்கிய செய்தி
முட்டை, கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறு அமைச்சர் பணிப்புரை
முட்டை மற்றும் கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராயுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.மாலைத்தீவு உட்பட பல நாடுகளுக்கு ஏற்கனவே கோழி இறைச்சி மற்றும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் இலங்கை முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும்.எவ்வாறாயினும், அடுத்த வருடத்திற்குள் நாட்டுக்குள் முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.2024 ஒகஸ்ட் மாதத்திற்குள் முட்டை உபரியாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், உலக சந்தையில் உள்ள வாய்ப்புகளை ஆராய ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.