முக்கிய செய்தி
கல்கிஸ்சையில் வெளிநாட்டுப் பெண் உயிரிழந்த சம்பவம்: வெளிவந்துள்ள தகவல்
முகப்புத்தகம் ஊடாக இலங்கை இளைஞர் ஒருவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்ட இங்கிலாந்து பிரஜாவுரிமை கொண்ட யுவதியொருவர் இலங்கை வந்து அவருடன் கல்கிஸ்சை – அல்விஸ் பிளேசில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த நிலையில் அக்கட்டடத்தின் 13ஆவது மாடியிலிருந்து அதிகாலை வேளையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
சின்னையா அழகேஸ்வரன் ரொமீனா எனும் 27 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சுவிட்சர்லாந்தில் சட்டப்பிரிவில் பயின்று வரும் 29 வயதுடைய இளைஞரொருவர் கடந்த வருடம் இலங்கைக்கு வந்து வெள்ளவத்தை பகுதியிலுள்ள தனது வீட்டில் தங்கியிருந்த நிலையில் உயிரிழந்த யுவதியுடன் முகப்புத்தகம் ஊடாக நட்பை ஏற்படுத்தி சுமார் 6 மாதங்களாக காதல் உறவை பேணி வந்துள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை வந்த யுவதிஅதன்படி குறித்த இளைஞரின் அழைப்பின் பேரில் இந்த யுவதி கடந்த மார்ச் 8ஆம் திகதி இலங்கைக்கு வந்து கல்கிஸ்ஸை – அல்விஸ் பிளேசில் பகுதியில் உள்ள குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்துள்ளார்.
இந்தியாவில் இடம்பெறும் மாநாடொன்றுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு யுவதி இலங்கைக்கு வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த பெண் செப்டெம்பர் பத்தாம் திகதி தனது நாட்டிற்கு செல்விருந்த நிலையில் ஒன்பதாம் திகதி அதிகாலை 2.40 மணியளவில் குறித்த அடுக்குமாடி தொகுதியின் 13ஆம் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாப்பு உத்தியோகத்தர் யுவதி இவ்வாறு வீழ்ந்து மரணித்திருப்பதாக பொலிஸாருக்கு அறிவித்தமைக்கு அமைய பொலிஸ் அதிகாரிகள் அங்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பிரேத பரிசோதனை அறிக்கைதொடர்ந்து சடலத்தை களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு பிரேத பரிசோதனை செய்து அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இச்சம்பவத்தில் காதலன் ஒரு மதத்தவராகவும், காதலி வேறொரு மதத்தவராகவும் இருந்துள்ளனர். காதலனை தனது மதத்திற்கு மாறுமாறு காதலி வற்புறுத்தியதாகவும் இந்த நிலையில் இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவ தினத்தன்றும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செப்டெம்பர் 8ஆம் திகதி இரவு தங்கள் இருவருக்கும் இடையே இந்த விடயம் தொடர்பாக சிறு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து தான் மதுபானம் அருந்திவிட்டு தூங்கிவிட்டதாகவும் எழுந்து பார்த்த போது அவரை காணவில்லை எனவும், பின்னர் அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாகவும் பெண்ணின் காதலன் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மத்திய வங்கியின் தகவல்குறித்த யுவதியின் காதலன் என தெரிவிக்கப்படும் வெள்ளவத்தையை சேர்ந்த 29 வயதுடைய குறித்த இளைஞன் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் கண்டறிவதற்காக தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.