முக்கிய செய்தி
கண் வில்லைகளுக்கு தட்டுப்பாடு இல்லை !
நாட்டில் கண் வில்லைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருந்துப்பொருட்கள் விநியோகப் பிரிவின் களஞ்சியசாலைகளில் மாத்திரமே கண் வில்லைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பிற்குள் கண் வில்லை சத்திரசிகிச்சைகள் வழமை போன்றே மேற்கொள்ளப்படுவதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷ தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாட்டில் 160 வகையான மருந்துகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அந்த மருந்துகளை அவசர கொள்வனவு நடைமுறையின் கீழ் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.