முக்கிய செய்தி
யாழ்.பல்கலைகழக மாணவன் கத்தியுடன் கைது!
யாழ் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் கத்தியுடன் நேற்றிரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.வர்த்தக நிலையம் ஒன்றுக்கு கத்தியுடன் சென்று அங்கு பணிபுரிபவர்களை அச்சுறுத்தியமையால் குறித்த மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் குறித்த மாணவனை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.