Connect with us

உள்நாட்டு செய்தி

அடுத்த பெரும் போக அறுவடை வரை தற்போதைய நெல் மற்றும் அரிசி போதுமானது

Published

on

   

தற்போது கையிருப்பில் உள்ள நெல் மற்றும் அரிசி அடுத்த பெரும் போக அறுவடை வரை போதுமானதாக இருப்பதால், நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்.வரட்சி காரணமாக ஒரு இலட்சம் ஏக்கர் நெற்செய்கையில் பயிர்கள் நட்டமடைந்த போதிலும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.சிறு போகத்தில் 503,000 ஹெக்டேயர் பயிர் செய்யப்பட்டுள்ளதாகவும், பல மாவட்டங்களில் அதிக விளைச்சல் கிடைப்பதால் நாட்டில் போதுமான அளவு இருப்புக்கள் இருக்கும் என்றும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.விவசாய திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் அறுவடை செய்யப்பட்ட பல வயல்களில் அதிக விளைச்சல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.எனவே அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்பட தேவையில்லை.எவ்வாறாயினும், விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்து வருவதால், அரசிடம் அரிசி அல்லது நெல்லுக்கான போதிய இருப்பு இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.தற்போது நெல் இருப்புக்கள் அனைத்தும் தனியாரிடம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.