Connect with us

உள்நாட்டு செய்தி

யாழில் திருமணமாகி இரு வாரங்களில் நடந்த விபத்து – கணவன் ஸ்தலத்தில் பலி

Published

on

கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் விபத்துக்குள்ளான தம்பதி திருமணம் செய்து இரண்டு வாரங்கள் என தெரியவந்துள்ளது. கோர விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏ9 வீதியில் செம்மணி வளைவிற்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளும், தண்ணீர் பவுசரும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. திருமணம் திருமணம் செய்து 2 வாரங்களான நிலையில் உறவினர்களை பார்ப்பதற்காக சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் 31 வயதான மனோஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த கொக்குவில் கிழக்கை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. மன்னாரை சேர்ந்த 26 வயதான மனைவி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.