முக்கிய செய்தி
வீடு திரும்பிய வர்த்தகரை காணவில்லை
மாத்தறை – தெனியாயவில் உள்ள தனியார் வங்கியொன்றிலிருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை பெற்று, கொலொன்னயில் உள்ள தமது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில் குறித்த வர்த்தகரின் மனைவி கொலொன்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அதற்கமைய, அவர் பயணித்த வேன் கொலொன்ன – பனிங்கந்த, பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.