உள்நாட்டு செய்தி
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் சென்ற,இருவர் மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!
வவுனியா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தை அண்மித்த பகுதியில் உள்ள தண்ணீர் குழியில் விழுந்து இரண்டு மாணவர்கள் இன்று (ஆகஸ்ட் 17) உயிரிழந்துள்ளனர்.வவுனியா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வலய மட்ட எல்லே போட்டியின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த 14 மற்றும் 15 வயதுடைய இரு மாணவர்களின் உடல்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.உயிரிழந்தவர்கள் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.