உள்நாட்டு செய்தி
மது போதையில் பாடசாலைக்கு சென்ற மாணவி !
கெகிராவ பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயது மாணவி ஒருவர் நேற்று(17) மது அருந்தி விட்டு பாடசாலைக்கு சென்ற நிலையில் மாணவியை கைது செய்த பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.சம்பந்தப்பட்ட மாணவி பாடசாலை அருகில் நின்ற போது அவரது நடவடிக்கை மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் மாணவியிடம் விசாரணை நடத்திய போது அவர் மது அருந்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.இதனையடுத்து பொலிஸார் மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.இந்த நிலையில் குறித்த மாணவியிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது மாணவியின் தாத்தாவே தன்னை மது பழக்கத்திற்கு அடிமையாக்கியதாக தெரிவித்துள்ளார்.