உள்நாட்டு செய்தி
35 வயதுக்கு மேற்பட்ட இலங்கை பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் உள்ள 35 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு குடும்ப சுகாதார பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெண்களை தாக்கும் புற்றுநோய் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இது குறித்து குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் இதனை குறிப்பிட்டள்ளார். இதன்படி, குறித்த வயதுக்கு இடைப்பட்ட அனைத்து பெண்களும் கர்ப்பப்பை, வாய் மற்றும் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய தங்கள் சுகாதாரப் பகுதியில் உள்ள குடும்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் என்று சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.