உள்நாட்டு செய்தி
20 சதவீதமான வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளன
இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் இலங்கை தொடருந்து திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக 50 சதவீத அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்களை ஊழல் மற்றும் மோசடிகளில் இருந்து விடுவிப்பதற்கான ஒரே வழி டிஜிட்டல் மயமாக்கல் மாத்திரமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு வடிவங்களில் எதிர்ப்புகள் இருந்தாலும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்க தொடர்ந்தும் முயற்சிக்கப்படுகிறது. வீதிகளில் பயணிக்கும் வாகனங்களில், சுமார் 20 சதவீதமானவை மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.