உள்நாட்டு செய்தி
மருந்து சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது !
மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி உயர் இரத்த அழுத்த்திற்கான மருந்தை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் மதவாச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள மருந்துக் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக அபாயகரமான மருந்துக் கட்டுப்பாட்டுச் சபையின் அனுராதபுர அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மதவாச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.உரிம நிபந்தனைகளை மீறி மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இந்த மருந்துகளை விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் மருந்து கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.போதைக்கு அடிமையானவர்கள் இந்த மருந்தை வாங்குவதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு மருந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.